• July
    17
    Wednesday

Main Area

Main



வி.ஐ.பி தொகுதி - 8 அங்கங்கே சுவாரசியமான வேட்பாளர்களைக் களமிறக்கும் அ.ம.மு.க-வின் தினகரன் இங்கே சொதப்பி விட்டார்! வேலூர் தொகுதி நிலவரம்!

ஏ.சி சண்முகம்-கதிர் ஆனந்த்
ஏ.சி சண்முகம்-கதிர் ஆனந்த்
Loading...

வேலூர்: வேலூரின் சரித்திரம் கொஞ்சம் குழப்பமானது! காங்கிரஸ், தி.மு.க,அ.தி.மு.க, முஸ்லீம் லீக்,பா.ம.க என்று எல்லோருமே இங்கே நின்றிருக்கிறார்கள்; வென்றுமிருக்கிறார்கள்.

வேலூர் சரித்திரம்
ttn

பாரபட்சம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள் வேலூர் மக்கள்! குசேலர் போன்ற தொழிற்சங்கத்தலைவர் முதல்,முன்பின் தெரியாத ஆசாமிகளு கூட வேலூரில் ஜெயித்திருக்கிறார்கள்.இதில் வேலூர்,அணைக்கட்டு, குடியாத்தம் ( தனி )
கே.வி குப்பம் (தனி) வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன.

இதில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது.
கடந்த தேர்தலில் 3 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று இரண்டாவது இடம் பிடித்த புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி சண்முகம் இந்த முறை அ.தி.மு.க,பி.ஜே.பி கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார்.அவரை எதிர்த்து திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் களமிறக்கப்படுகிறார்.

தினகரனின்  சொதப்பல் 
ttv

அங்கங்கே சுவாரசியமான வேட்பாளர்களைக் களமிறக்கும் அ.ம.மு.க-வின் தினகரன் இங்கே சொதப்பி விட்டார்.முன்னாள் அமைச்சர் மீசைக்கார பாண்டுரங்கன்தான் அ.ம.மு.க வேட்பாளர்.போர் நிதிக்காக புரட்சித்தலைவி அம்மா தன்னுடைய ‘திருமாங்கல்யத்தை’ கொடுத்தார் என்பது போன்ற பல முத்துக்களை உதிர்த்து பதவியை இழந்தவர் பாண்டு.இவர் ரேஸ்லேயே இல்லை.போட்டி கதிர் ஆனந்துக்கும் ஏ.சி.சண்முகத்துக்கும்தான்.

அ.தி.மு.க பா.ம.க துணையுடன் களமிறங்கும் ஏ.சி.எஸ்
acs

ஏ.சி.எஸ் தொகுதிக்கு நன்கு நன்கு அறிமுகமானவர்.1984 ல் அ.தி.மு.க சார்பில் ஒருமுறை ஏற்கனவே தேர்ந்தெடுக்கப் பட்டவர்.கடந்த முறை கூட்டணி இல்லாமலே இரண்டாவது இடம் பிடித்தவர்.இந்தமுறை அ.தி.மு.க,பா.ம.க,துணையுடன் களமிறங்குகிறார்.

ஏ.சி.எஸுக்கு போட்டி  இவர்தான்!?
ttn

கதிர்  ஆனந்த்- தைப் பொறுத்தவரை புதுமுகமானாலும் பலமான கூட்டணி இருக்கிறது.தொகுதியின் பெரும்பான்மை சமூகமான வன்னியர் என்கிற வசதி இருக்கிறது.துரைமுருகனின் மகன் என்கிற அறிமுகமிருக்கிறது.பல மணிநேரம் ஆங்கிலம் பேசக்கூடியவர்.இவருக்கும் ஏ.சி.எஸுக்கும் இடையேதான் இங்கே போட்டி.

காசு ஒரு பொருட்டில்லை
kadhir

இரண்டு தரப்பிலும் காசு ஒரு பொருட்டில்லை என்பதால் வெய்யிலைப் போலவே பிரச்சாரத்திலும் அனல் பறக்கப் போகிறது!ஆனாலும் இந்தக் கோடைக்கு மக்கள் ஏ.சி.எஸ்ஸை தேர்ந்தெடுப்பார்கள் என்றே சொல்கிறது இப்போதைய கள நிலவரம்.

2018 TopTamilNews. All rights reserved.