‘கறுப்புச் சட்டங்களை வாபஸ் வாங்குங்க’ – அமளியால் மக்களவை 7 மணி வரை ஒத்திவைப்பு!

‘கறுப்புச் சட்டங்களை வாபஸ் வாங்குங்க’ – அமளியால் மக்களவை 7 மணி வரை ஒத்திவைப்பு!

வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து இரவு 7 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கறுப்புச் சட்டங்களை வாபஸ் வாங்குங்க’ – அமளியால் மக்களவை 7 மணி வரை ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரத்திலிருந்து தொடங்கி நடைபெற்றுவருகிறது. நடுவில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பிப்ரவரி 1ஆம் தேதி காலை 11 மணி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.

இன்று மீண்டும் மக்களவை கூடியது. அப்போது எதிர்க்கட்சிகள் வேளாண் சட்டங்களை கறுப்புச் சட்டங்கள் என்று கூறி திரும்பிப்பெற வேண்டும் என்று கோஷமிட்டு கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து இரவு 7 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.