வெட்டுக்கிளி கிலோ ரூ.1000.. கொரோனா பீதியிலும் அடங்காத மக்கள்!

 

வெட்டுக்கிளி கிலோ ரூ.1000.. கொரோனா பீதியிலும் அடங்காத மக்கள்!

கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. அதேபோல் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் விவசாயம் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. வெட்டுக்கிளிகள் படையெடுப்பு சமீபகாலமாக அதிகமாகியுள்ளது. ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு அதிக அளவில் இருக்கிறது. இருப்பினும் வெட்டுக்கிளிகள் தக்காண பீடபூமியை தாண்டி தமிழகத்துக்கு வராது என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வெட்டுக்கிளி கிலோ ரூ.1000.. கொரோனா பீதியிலும் அடங்காத மக்கள்!

இதுவொருபுறமிருக்க வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு உணவு பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதில் வைட்டமின் சத்துக்கள் உள்ளதாக கூறப்படும் நிலையில் மலேசிய புறநகர் பகுதிகளில் 1 கிலோ வெட்டுக்கிளியின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 1000 ஆக உள்ளது. சவுதியில் வெட்டுகிளையை பிடித்து பையில் அடைத்து விற்கின்றனர். இதை அங்குள்ள மக்கள் வறுத்து சாப்பிடுகிறார்களாம். அதேபோல் பாகிஸ்தானில் வெட்டுககிளி ஓட்டல்களிலும் கிடைக்கிறது. மேலும் வியட்நாமிலும் வெட்டுக்கிளியை சாப்பிடும் வழக்கம் உள்ளது.

https://twitter.com/Sadishk20884493/status/1266421438623481858

ஏற்கனவே கடந்த ஆண்டு உருவான கொரோனா பாதிப்பே இன்னும் கட்டுக்குள் அடங்காத நிலையில் தற்போது இந்த வெட்டுக்கிளியின் அட்டூழியம் விவசாயிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.