சீனாவுக்கு படையெடுத்த வெட்டுக்கிளி!

 

சீனாவுக்கு படையெடுத்த வெட்டுக்கிளி!

பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகளை மிரட்டிய வெட்டுக்கிளிகள் சீனாவில் நுழைந்துள்ளன.

கொரானாவால் நாட்டின் நிதி நிலைமை கெட்டது என்றால்,சமீபத்தில் படையடுத்து வரும் வெட்டுக்கிளிகளால் எதிர்காலத்தில் உணவுப்பஞ்சம் ஏற்படுமோ என்று அச்சம் உருவாகியுள்ளது. இந்தியாவில் வடமாநிலங்களுக்குள் புகுந்த வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் பயிர்களை வேட்டையாடி மிகுந்த சேதத்தை ஏற்படுத்தின. தொடர்ந்து வெட்டுக்கிளிகள் படை பாகிஸ்தானுக்கு சென்றது.

சீனாவுக்கு படையெடுத்த வெட்டுக்கிளி!

இந்நிலையில் தற்போது சீனாவில் தென்மேற்கு பகுதியில் உள்ள யுனான் மாகாணத்தின் வனப்பகுதிக்குள் மஞ்சள் நிற பாம்போ வெட்டுக்கிளிகள் அதிகளவில் தென்பட்டுள்ளன. புயூர் நகரின் வனத்துறை வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், கடந்த 28 ஆம் தேதி முதல் வெட்டுக்கிளி தாக்குதல் நடைபெறுவதாகக் கூறப்பட்டுள்ளது. சுமார் நாற்பது ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் வெட்டுக்கிளிகள் ஆதிக்கம் செலுத்தி வேட்டையை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை கட்டுப்படுத்தும் விதத்தில் மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெற்றாலும், வெட்டுக்கிளிகள் வருகை உள்ளூர் மக்களுக்கு பெரும் கலக்கத்தை கொடுத்துள்ளது.