மீண்டும் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்… பயிர்கள் அழிக்கப்பட்டதால் விவசாயிகள் வேதனை!

 

மீண்டும் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்… பயிர்கள் அழிக்கப்பட்டதால் விவசாயிகள் வேதனை!

ராஜஸ்தானின் ஹஸ்தேடா கிராமம் வெட்டுக்கிளிகள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. அங்குள்ள பயிர்கள்அனைத்தும் அளிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய விவசாயி ஷீஷ்பால், “வெட்டுக்கிளிகள் எங்கள் கிராமத்தை நான்காவது முறையாக தாக்கியுள்ளன. அவைகள் எங்கள் பயிர்களுக்கும், கால்நடை தீவனத்திற்கும் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. எங்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்குமாறு மாநில அரசிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்” என்று கூறியுள்ளார்.

ராஜஸ்தான் வேளாண் துறை துணை இயக்குநர் பி.ஆர்.கத்வா, பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தானுக்குள் நுழையும் வெட்டுக்கிளி கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.

மீண்டும் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்… பயிர்கள் அழிக்கப்பட்டதால் விவசாயிகள் வேதனை!

“வெட்டுக்கிளி தாக்குதல் கடந்த 1.5 மாதங்களாக நடந்து வருகிறது. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பிரச்சினை என்னவென்றால், நாங்கள் பழைய கூட்டத்தைக் கொன்றுவிட்டோம். ஆனால் இப்போது புதிய கூட்டம் ஒன்று வந்துள்ளது. அதைக் கட்டுப்படுத்த விமானப்படை ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படும் என்று இந்திய அரசு கூறுகிறது. வெட்டுக்கிளிகள் பாகிஸ்தானுக்கு அருகிலுள்ள எல்லைப் பகுதிகளை தங்கள் இனப்பெருக்கம் செய்துள்ளன. அவை இங்கு வருவதை பாகிஸ்தானால் கட்டுப்படுத்த முடியவில்லை, “என்று மேலும் தெரிவிதித்துள்ளனர்.

மழைக்காலம் வேகமாக நெருங்கி வருவதால், இந்த புதிய வெட்டுக்கிளிகள் கூட்டம் மாநிலத்தின் பாலைவனப் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யும் இடங்களையும் அமைக்க முடியும், இது சிக்கலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் வேளாண் அதிகாரி கூறியுள்ளார்.