சென்னையில் ஊரடங்கு 12 நாட்களுக்கு கடுமையாக பின்பற்றப்படும் – காவல் ஆணையர் விஸ்வநாதன்

 

சென்னையில் ஊரடங்கு 12 நாட்களுக்கு கடுமையாக பின்பற்றப்படும் – காவல் ஆணையர் விஸ்வநாதன்

தமிழகத்தில் கொரோனா நாளுக்கு நாள் அதிவேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டும் பாதிப்பு குறைந்ததாக இல்லை. அதன் காரணமாக பாதிப்பு அதிகமாக இருக்கும் மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த நான்கு மாவட்டங்களிலும், கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஊரடங்கு 12 நாட்களுக்கு கடுமையாக பின்பற்றப்படும் – காவல் ஆணையர் விஸ்வநாதன்

இ-பாஸ் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டும், திருப்பி அனுப்பப்பட்டும் வருகின்றன. குறிப்பாக சென்னையில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அண்ணா மேம்பாலம், வடபழனி உள்ளிட்ட முக்கிய சாலைகள் மூடப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருவதால் சென்னையில் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து பேசிய காவல் ஆணையர் விஸ்வநாதன், தேவையில்லாமல் வெளியே சுற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் சென்னையில் 12 நாட்கள் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும் என்றும் கூறினார். மேலும், வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கட்டாயமாக மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க வருபவர் வாகனங்களை பயன்படுத்தக் கூடாது என்றும் கூறினார்.