இந்த 4 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு? மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை

 

இந்த 4 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு? மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நான்காம் கட்ட ஊரடங்கு போடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் ஊரடங்கு நீடிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது. இதனிடையே ஊரடங்கு நீடிப்பதை பற்றி அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. நாளையுடன் 4 ஆம் கட்ட ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த 4 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு? மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை

அந்த கூட்டம் முடிந்த பிறகு மருத்துவ குழு பிரதிநி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், தமிழகத்தில் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக இருக்கிறது என்றும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கொரோனா அதிகமாக இருக்கிறது என்றும் தெரிவித்தார். அதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் தளர்வு அளிக்கலாம் என்று முதல்வரிடம் பரிந்துரைத்துள்ளதாகவும் சென்னையில் தளர்வு அளிக்க வேண்டும் என்று கூறியதாகவும் தெரிவித்தார். அதே போல தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் சென்னை, செங்கல்பட்டு உட்பட 13 நகரங்களில் கடும் கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.