பொதுமுடக்க விதிமீறல்! இதுவரை சுமார் ரூ. 21 கோடி அபராதம் வசூல்- காவல்துறை

 

பொதுமுடக்க விதிமீறல்! இதுவரை சுமார் ரூ. 21 கோடி அபராதம் வசூல்- காவல்துறை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும், சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதாவது ஒரு மாவட்டத்திற்குள் செல்வதற்கு இ-பாஸ் தேவை இல்லை என்றும் பிற மாவட்டங்களுக்குச் சென்று வர பாஸ் கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதே போல மற்ற மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களும் இ-பாஸ் பெற்றுக் கொண்டு தான் வர வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. அவ்வாறு பாஸ் இல்லாமலும், அத்தியாவசிய தேவைகள் இல்லாமலும் வெளியே சுற்றித் திரிந்த வாகனங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகின்றன.

பொதுமுடக்க விதிமீறல்! இதுவரை சுமார் ரூ. 21 கோடி அபராதம் வசூல்- காவல்துறை
இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் பொதுமுடக்க விதிகளை மீறி வெளியே சுற்றித்திரிந்த நபர்களிடம் இருந்து இதுவரை 20 கோடியே 91 லட்சத்து 11 ஆயிரத்து 473 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுவரை வாகனங்களில் வெளியே சுற்றிய 9,78,648 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் 6,86,664 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் ஊரடங்கை மீறியதாக 8,85,270 வழக்குகள் பதிவாகியுள்ளது.