விதிகளை மீறி சுற்றித்திரிந்தவர்களிடம் இருந்து ரூ.22.09 கோடி அபராதம் வசூல்!

 

விதிகளை மீறி சுற்றித்திரிந்தவர்களிடம் இருந்து ரூ.22.09 கோடி அபராதம் வசூல்!

பொதுமுடக்க விதிகளை மீறியவர்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வந்ததால் தளர்வுகளுடன் கூடிய 7ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு முடிவடையவிருந்த நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடனும் மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் விவரங்கள் நேற்று மாலை வெளியாகின. அதில், முழு நேர கடைகள் திறக்கலாம் என்றும் புறநகர் ரயில் சேவை தவிர பேருந்துகள் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து சேவைக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

விதிகளை மீறி சுற்றித்திரிந்தவர்களிடம் இருந்து ரூ.22.09 கோடி அபராதம் வசூல்!

ஆனால் சுற்றுலாத் தலங்கள், பூங்காக்கள், மால்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவை இயங்க அனுமதி வழங்கப்பட்டது. ஊரடங்கு தளர்வுகள் அளித்த இந்த அறிவிப்பு மக்களிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும், மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியிருக்கிறது. இதனிடையே, தளர்வுகளை அளித்தும் தேவையில்லாமல் சுற்றித் திரிபவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

விதிகளை மீறி சுற்றித்திரிந்தவர்களிடம் இருந்து ரூ.22.09 கோடி அபராதம் வசூல்!

இந்த நிலையில் பொதுமுடக்க விதிகளை மீறி சுற்றித்திரிந்தவர்களிடம் இருந்து ரூ.22.09 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுவரை 6.99 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் 10.03 லட்சம் பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் 9.05 லட்சம் வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.