விதிகளை மீறி ஊரை சுற்றிவர்களிடம் இருந்து ரூ.21.19 கோடி அபராதம் வசூல்!

 

விதிகளை மீறி ஊரை சுற்றிவர்களிடம் இருந்து ரூ.21.19 கோடி அபராதம் வசூல்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. வரும் 31 ஆம் தேதியுடன் இந்த ஊரடங்கு முடியவுள்ள நிலையில், ஊரடங்கை நீடிப்பது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. இதனிடையே மக்களை கண்காணிக்க அமல்படுத்தப்பட்ட இபாஸ் முறையில் அரசு தளர்வுகளை அறிவித்தது. அதனால் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதுமே வாகன புழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு மக்களின் தேவைகளுக்கு ஏற்ப தளர்வுகள் கொடுக்கப்பட்டிருப்பினும், தடையை மீறி சுற்றித்திரியும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

விதிகளை மீறி ஊரை சுற்றிவர்களிடம் இருந்து ரூ.21.19 கோடி அபராதம் வசூல்!

இந்த நிலையில் பொதுமுடக்க விதிகளை மீறி சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.21.19 கோடி அபராதமாக பெறப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 6.88 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் 9.83 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் ஊரடங்கை மீறியதாக 8.89 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.