பொதுமுடக்க விதிகளை மீறிய 6.86 லட்சம் வாகனங்கள் பறிமுதல் : காவல்துறை அறிவிப்பு!

 

பொதுமுடக்க விதிகளை மீறிய 6.86 லட்சம் வாகனங்கள் பறிமுதல் : காவல்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஊரடங்கு நீடிக்கப்படுமா என வெகுவாக கேள்விகள் எழுந்துள்ளன. இதனிடையே மக்களுக்கு இடையூறாக இருந்த இபாஸ் முறையில் அரசு தளர்வுகள் அளித்தது. அதாவது விண்ணப்பிக்கும் எல்லாருக்குமே தங்கு தடையின்றி இபாஸ் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. அதன் படி நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இபாஸ் வழங்கப்பட்டுள்ளது. இபாஸ் முறையில் தளர்வுகள் அளிக்கப்பட்டிருப்பினும் பலர் ஊரடங்கு விதிகளை மீறி வெளியே சுற்றித்திரிகின்றனர். நோய்த் தொற்றில் இருந்து தங்களை காத்துக்கொள்ள வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதை பொருட்படுத்தாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது தமிழக காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பொதுமுடக்க விதிகளை மீறிய 6.86 லட்சம் வாகனங்கள் பறிமுதல் : காவல்துறை அறிவிப்பு!

இந்த நிலையில், பொதுமுடக்க விதிகளை மீறி வெளியே சுற்றித்திரிந்த நபர்களிடம் இருந்து இதுவரை ரூ..20.79 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுவரை வாகனங்களில் வெளியே சுற்றிய 9,76,018 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் 6,86,031 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் 8,83,402 வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும் அறிவித்துள்ளது.