ஒரே மாதிரியான தளர்வுகள்…. ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லலாம்

 

ஒரே மாதிரியான தளர்வுகள்…. ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லலாம்

ஊரடங்கில் 3 வகையாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களை ஒன்றாக்கி தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா குறைவதால் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. பாதிப்பு அதிகமிருந்த கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் அங்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒரே மாதிரியான தளர்வுகள்…. ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லலாம்

என்னென்னெ தளர்வுகள்?

கேளிக்கை, பொழுதுப்போக்கு பூங்காக்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி

கேளிக்கை பூங்காக்களில் தண்ணீர் தொடர்பான விளையாட்டுகளுக்கு அனுமதி கிடையாது

அருங்காட்சியகங்கள், பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ் வைப்பகங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்

ஐ.டி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதி

லாட்ஜூகள், கெஸ்ட் ஹவுஸ் ஆகியவை செயல்பட அனுமதி

அனைத்து வகை கடைகளும் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி

கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு உள்பட மலைப்பகுதிகளுக்கு செல்ல திங்கள் முதல் இபாஸ் தேவையில்லை