“லாக்டவுன் தீர்வல்ல… வேற வழியில்ல கொரோனாவோட வாழ கத்துக்கோங்க” – சுகாதார துறை அமைச்சர் பகீர்!

“லாக்டவுன் தீர்வல்ல… வேற வழியில்ல கொரோனாவோட வாழ கத்துக்கோங்க” – சுகாதார துறை அமைச்சர் பகீர்!

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை பரவிவருவது கண்கூடாகவே தெரிகிறது. குறிப்பாக இந்தியாவில் மட்டும் இரட்டை உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவிவருவதாக மத்திய சுகாதாரத் துறை கூறியது. அது மட்டுமில்லாமல் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. உள்ளூர் ஊரடங்கு அமல்படுத்த மாநிலங்களுக்கு அனுதி அளித்துள்ளது. அதன்படி மகாராஷ்டிராவில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

“லாக்டவுன் தீர்வல்ல… வேற வழியில்ல கொரோனாவோட வாழ கத்துக்கோங்க” – சுகாதார துறை அமைச்சர் பகீர்!

இதனால் மீண்டும் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பிருப்பதாக மக்கள் மத்தியில் பரவலான கருத்து நிலவிவருகிறது. மத்திய அரசு இன்னொரு ஊரடங்குக்கு சாத்தியமில்லை என்று உறுதியாகக் கூறினாலும் மக்களிடம் அந்த அச்சம் இன்னும் போகவில்லை. இச்சூழலில் டெல்லி சுகாதார துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கொரோனாவோடு வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு முன்னதாக கடந்தாண்டே டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும் இதே கருத்தை முன்வைத்திருந்தார்.

“லாக்டவுன் தீர்வல்ல… வேற வழியில்ல கொரோனாவோட வாழ கத்துக்கோங்க” – சுகாதார துறை அமைச்சர் பகீர்!

செய்தியாளர்களிடம் பேசிய ஜெயின், “இரண்டாம் முறையாக ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இல்லை. முன்பு இருந்த நிலை வேறு. இதற்கு முன்னதாக வைரஸின் தீவிரம் எப்படி இருக்கும். அது எப்படி பரவும் என எவருக்கும் தெரியாது. அதனால் ஊரடங்கு போடப்பட்டது. ஊரடங்காலும் வைரஸை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் ஊரடங்கு ஒரு தீர்வல்ல என நான் நினைக்கிறேன். கொரோனா பரவ ஆரம்பித்தது முதலே அறிவியல் நிபுணர்கள் இது விரைவில் முடிவடையாது. அதனுடன் நாம் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்று கூறினர். அதையே தான் நானும் வழிமொழிகிறேன்” என்றார்.