மீண்டும் முழு ஊரடங்கு : தீவிரமாகும் கட்டுப்பாடுகள்; முதல்வர் இன்று ஆலோசனை!

மீண்டும் முழு ஊரடங்கு : தீவிரமாகும் கட்டுப்பாடுகள்; முதல்வர் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

மீண்டும் முழு ஊரடங்கு : தீவிரமாகும் கட்டுப்பாடுகள்; முதல்வர் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 1,997பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 69ஆயிரத்து 398ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34ஆயிரத்து 230ஆக உள்ளது. இதனால் மீண்டும் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் முழு ஊரடங்கு : தீவிரமாகும் கட்டுப்பாடுகள்; முதல்வர் இன்று ஆலோசனை!

இந்த சூழலில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நடத்தப்படும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கடுமையான கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. ஏற்கனவே முழு ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய சூழலை பொதுமக்கள் ஏற்படுத்திட வேண்டாம் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்த நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.