கர்நாடகாவில் ஜூன் 14 வரை ஊரடங்கு

 

கர்நாடகாவில் ஜூன் 14 வரை ஊரடங்கு

கர்நாடகாவில் கொரோனாவை கட்டுப்படுத்த வரும் 7 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அங்கு கொரோனா, இரண்டாம் அலையில் உயிர் பலி எண்ணிக்கை அதிகமாகியுள்ளன.

கர்நாடகாவில் ஜூன் 14 வரை ஊரடங்கு

செப்டம்பர், அக்டோபரில் 3ம் அலை ஆரம்பிக்கவுள்ளதாகவும், குழந்தைகளை தான் அதிகம் பாதிக்கும் எனவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துவருகின்றனர். இந்நிலையில், கர்நாடகாவில் 3ஆம் அலை குறித்து ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரைகள் வழங்க, நாராயணா இருதாலயா நிறுவனர் தேவிபிரசாத் ஷெட்டி தலைமையில், நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவுடன், பெங்களூரு குமாரகிருபா சாலையில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில், முதல்வர் எடியூரப்பா, இன்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான படுக்கைகள், ஆக்சிஜன், மருந்து என அனைத்து வசதிகளும் தயார் நிலையில் வைத்து கொள்ளும்படி அரசுக்கு குழு பரிந்துரைத்தது. மருத்துவ நிபுணர்கள் குழுவின் ஆலோசனைக்கு பின், கொரோனா தொற்று பரவல் தடுப்பு பொறுப்பு அமைச்சர்களுடன், முதல்வர் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். அப்போது, ஜூன், 7 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட வேண்டும் என்று பெரும்பாலான அமைச்சர்கள் முதல்வரிடம் வலியுறுத்தினர். இதனையடுத்து வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.