சென்னையை தொடர்ந்து மேலும் சில மாவட்டங்களில் முழு முடக்கமா?.. வெளியான பரபரப்பு தகவல்!

 

சென்னையை தொடர்ந்து மேலும் சில மாவட்டங்களில் முழு முடக்கமா?.. வெளியான பரபரப்பு தகவல்!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,377 ஆக உயர்ந்துள்ள நிலையில், 757 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 32,754 பேர் குணமடைந்து விட்டதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்திலேயே அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,172 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே கொரோனா அதிகமாக பரவி வரும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையை தொடர்ந்து மேலும் சில மாவட்டங்களில் முழு முடக்கமா?.. வெளியான பரபரப்பு தகவல்!

இந்த நிலையில் மேலும் சில மாவட்டங்களில் முழு முடக்கம் அமல்படுத்த உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் இதுவரை 477 பேருக்கும், திருவண்ணாமலையில் 1,060 பேருக்கும், ராணிப்பேட்டையில் 470 பேருக்கும், மதுரையில் 705 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த மாவட்டங்களில் முழு முடக்கம் அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. மதுரையில் இன்று ஒரே நாளில் 68 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.