தேர்தலுக்கு பின் ஊரடங்கு! தயார் நிலையில் சென்னை – மாநகராட்சி ஆணையர்

 

தேர்தலுக்கு பின் ஊரடங்கு! தயார் நிலையில் சென்னை – மாநகராட்சி ஆணையர்

கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை ரிப்பன் மாளிகையில் ராட்சத பலூன்களை ஆணையர் பிரகாஷ் பறக்கவிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,“நேற்று வரை பறக்கும் படையினரால் சென்னையில் மட்டும் 26 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில்8 கோடியே 26 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அடுத்த மூன்று நாட்கள் மிகவும் கடுமையானது. எனவே கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் 577 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு காவல் பணிகளுக்காக மத்திய ராணுவ படையினர், நுண் பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு முழுமையாக ஒளிப்பதிவு செய்யப்படும்.

தேர்தலுக்கு பின் ஊரடங்கு! தயார் நிலையில் சென்னை – மாநகராட்சி ஆணையர்

சென்னையை கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. முகக் கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் ஆகியவை இருந்தால் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும். தற்போது சென்னையில் 33 ஆயிரம் தெருக்களில் 358 தெருக்களில் மூன்று பேருக்கு மேல் தொற்று உள்ளது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் இன்னும் தீவிரமான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா அதிகரித்ததால் அதனை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயாராக உள்ளது” எனக் கூறினார்.