“இந்தியா முழுவதும் மீண்டும் லாக்டவுன்?”

 

“இந்தியா முழுவதும் மீண்டும் லாக்டவுன்?”

இந்தியாவில் கொரோனா பரவல் உக்கிரமாக இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது. 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். மிகவும் கோரமாக தாக்கி வருவதை இதிலிருந்தே விளங்கி கொள்ளலாம். மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள உத்தரப் பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. மீண்டும் இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்க அவசியம் எழுந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

“இந்தியா முழுவதும் மீண்டும் லாக்டவுன்?”

தற்போது அமெரிக்காவின் புகழ்பெற்ற தொற்றுநோய் நிபுணரான அந்தோணி ஃபாஸி சில காலம் ஊரடங்கு தேவை என்ற கருத்தை வழிமொழிந்திருக்கிறார். இந்தியாவின் நிலை குறித்துப் பேசிய ஃபாஸி, “இந்தியாவில் மிக தீவிரமாக கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தவும், அதன் பரவல் சங்கிலியை உடைக்கவும் சில வாரங்களுக்கு ஊரடங்கு மிகவும் தேவையானது. நான் நீண்ட கால ஊரடங்கை சொல்லவில்லை. தற்காலிகமாக அறிவித்தாலே பரவல் சங்கிலி உடைந்துவிடும்.

“இந்தியா முழுவதும் மீண்டும் லாக்டவுன்?”

இந்த ஊரடங்கு காலத்தில் மருத்துவக் கட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும். தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தும் பணியையும் துரிதப்படுத்த வேண்டும். 140 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் வெறும் 2 சதவீத மக்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. இது மிகவும் மோசமான போக்கு. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே பேராபத்திலிருந்து இந்தியா தப்ப முடியும்” என்று கூறினார்.