ஊரடங்கை நீட்டித்தால் பொருளாதார பேரழிவு உண்டாகும் – எச்சரிக்கும் ஆனந்த் மகிந்திரா

 

ஊரடங்கை நீட்டித்தால் பொருளாதார பேரழிவு உண்டாகும் – எச்சரிக்கும் ஆனந்த் மகிந்திரா

டெல்லி: ஊரடங்கை நீட்டித்தால் பொருளாதார பேரழிவு உண்டாகும் என தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா கூறியுள்ளார்.

ஊரடங்கு நீட்டிப்புகள் பொருளாதார ரீதியாக பேரழிவை ஏற்படுத்தும் என்பது மட்டுமில்லாமல் அவை மருத்துவ நெருக்கடியையும் உருவாக்குகின்றன என மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.

ஊரடங்கால் ஆபத்தான உளவியல் விளைவுகள் ஏற்படுவது மட்டுமின்றி கொரோனா அல்லாத நோயாளிகளை புறக்கணிக்கும் பெரும் ஆபத்து உருவாக்கி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

ஊரடங்கை நீட்டித்தால் பொருளாதார பேரழிவு உண்டாகும் – எச்சரிக்கும் ஆனந்த் மகிந்திரா

முன்னதாக, ஊரடங்கு நீட்டிப்பு உதவாது என்று 49 நாட்கள் ஊரடங்குக்கு பின்னர் ஆனந்த் மகிந்திரா கூறியிருந்தார். கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயரும். அதற்கேற்ப மருத்துவமனை படுக்கைகளை அதிகரிப்பதால் பலரது உயிரைக் காப்பாற்றலாம் என கூறியிருந்தார்.

இந்தியா ஏற்கனவே கொரோனா பரவலின் மூன்றாம் கட்டத்தை எட்டி விட்டதாக  மத்திய அரசு நாடு தழுவிய ஊரடங்கை அறிவிப்பதற்கு முன்பே மார்ச் 22 அன்று ஆனந்த் மகிந்திரா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.