தமிழகத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

 

தமிழகத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாளைக்கு கொரோனா பாதிப்பு 400 முதல் 600 வரையிலேயே அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86,224 ஆக அதிகரித்துள்ளது. இந்த கொடிய வகை நோய்த்தொற்றில் இருந்து மக்களை காக்க 5 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,செங்கல்பட்டு, தேனி மற்றும் மதுரையில் கடுமையான ஊரடங்கு அமலில் இருக்கிறது.இருப்பினும் இங்கு கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

தமிழகத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

இந்த நிலையில் தமிழகத்தில் பாதிப்பு பன்மடங்கு அதிகமாகி வருவதால், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக இன்று காலை தலைமை செயலகத்தில் மருத்துவக்குழு நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் ஊரடங்கை ஜூலை 31 ஆம் தேதிவரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளாது. சென்னை காவல் எல்லை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ஜூலை 6 ஆம் தேதியிலிருந்து சென்னை காவல் எல்லை, மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் கடந்த 19 ஆம் தேதிக்கு முன்னர் இருந்த கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தொடரும். ஜூலை 6 ஆம் தேதியிலிருந்து மதுரை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த 24 ஆம் தேதிக்கு முன்னர் இருந்த கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும். மதுரை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் ஜூலை 5 வரை முழு முடக்கம் தொடரும். அந்தந்த மாவட்டத்துக்குள் இ பாஸ் இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக்கூடாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.