சலூன்கள், ஆட்டோக்கள், வாடகை டாக்ஸிகள் செயல்பட அனுமதி!

சலூன்கள், ஆட்டோக்கள், வாடகை டாக்ஸிகள் செயல்பட அனுமதி!

தமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு தடை தொடரும் என்றும் பிற மாநிலங்களுக்கான போக்குவரத்து தடை நீடிக்கும் என்றும் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பொதுமுடக்க தளர்வுகள்:

  • மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கு ஜூன் 30ஆம் தேதி வரை தடை விதிப்பு
  • ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு பயணம் செய்ய இ-பாஸ் தேவை
  • மண்டலத்திற்குள் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை
  • தமிழகத்தில் ஜூன் 1 முதல் 7ஆம் தேதி வரை காய்கறிக்கடைகள், உணவகங்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரை இயங்கலாம்
  • ஜூன் 8 முதல் தேநீர் கடைகள், உணவகங்களில் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி

சலூன்கள், ஆட்டோக்கள், வாடகை டாக்ஸிகள் செயல்பட அனுமதி!

  • வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றை திறக்க தடை நீட்டிப்பு
  • ஜூன் 30 வரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனங்களை திறக்க தடை நீட்டிப்பு
  • கல்வி நிறுவனங்கள் இணைய வழிக்கல்வி கற்றலை தொடரலாம்; அதனை ஊக்கப்படுத்தலாம்
  • வணிக வளாகங்கள் தவிர பிற பெரிய கடைகள் 50% பணியாளர்களுடன் செயல்படலாம்
  • மறுஉத்தரவு வரும்வரை வழிபாட்டுத் தலங்களை திறக்க தடை விதிப்பு
  • சலூன் கடை, அழகு நிலைய கடைகள் ஏசி வசதியை பயன்படுத்தாமல் செயல்பட அனுமதி
  • ஆட்டோக்களில் பயணிகள் 2 பேர் வரை பயணம் செய்ய அனுமதி

சலூன்கள், ஆட்டோக்கள், வாடகை டாக்ஸிகள் செயல்பட அனுமதி!

  • சலூன்கள், ஆட்டோக்கள், வாடகை டாக்ஸிகள், தேநீர் கடைகள், பெரிய கடைகள் ஆகியவை செயல்பட அனுமதி
  • திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், பார், கூட்ட அரங்குகளை திறக்க தடை
  • தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் 20% பணியாளர்கள் அதிகபட்சம் 40 பேருடன் இயங்கலாம்
  • 50% ஊழியர்களுடன் அனைத்து தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி
  • தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் 20% பணியாளர்கள் அதிகபட்சம் 40 பேருடன் இயங்கலாம்
  • 50% ஊழியர்களுடன் அனைத்து தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி