தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 21ம் தேதி வரை நீட்டிப்பு!

 

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 21ம் தேதி வரை நீட்டிப்பு!

கர்நாடகாவில் ஜூன் 21ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தாக்கம் குறைந்து வரும் நிலையில் அந்தந்த மாநில அரசுகள் ஊரடங்கை நீட்டித்து தளர்வுகளை அளித்து வருகின்றன. அந்த வகையில், கர்நாடக மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூன் 21-ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 21ம் தேதி வரை நீட்டிப்பு!

கர்நாடகாவில் கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு ஜூன் 14 ஆம் தேதியோடு நிறைவடையவிருக்கும் நிலையில் 11 மாவட்டங்களில் தொற்று அதிகமாக இருப்பதால், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து எடியூரப்பா மூத்த அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, தொற்று குறைவாக இருக்கும் மாவட்டங்களில் தளர்வுகள் அளிக்கப்படுவதாகவும் பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் அறிவித்துள்ளார்.

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 21ம் தேதி வரை நீட்டிப்பு!

பாதிப்புக் குறைவாக இருக்கும் மாவட்டங்களில், தொழிற்சாலைகள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம். கட்டுமானத் தொழில் தொடங்கலாம். அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படலாம். பின்னலாடை தொழில்கள் 30% பணியாளர்களுடன் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.