கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் அதிகரித்த தற்கொலைகள் – என்ன தீர்வு மனநல நிபுணர்கள் ஆலோசனை

 

கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் அதிகரித்த தற்கொலைகள் – என்ன தீர்வு மனநல நிபுணர்கள் ஆலோசனை

உலக நாடுகளை அச்சறுத்தி வரும் கொரோனா என்கிற கோவிட் 19 வைரஸ், மக்களின் இயல்பு வாழ்க்கை புரட்டி போட்டுவிட்டது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கிவருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 80 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸிக்கு மருந்து, மாத்திரைகள் கண்டுபிடிக்காத சூழலில் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதை உலக நாடுகள் தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது.தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் மற்ற சிகிச்சைகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அதன்காரணமாக உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் அதிகரித்த தற்கொலைகள் – என்ன தீர்வு மனநல நிபுணர்கள் ஆலோசனை

கொரோனாவைக் கட்டுப்படுத்த இந்தியாவில் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தளர்வுகளுடன் சில மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை ஆகிய 5மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. 3 மாதங்களுக்கு மேலான ஊரடங்கால் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துவருகின்றனர். வீட்டுக்குள்ளேயே முடங்கியதால் மனநல அளவிலும் உடலளவிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. டிவி, செல்போன், புத்தக வாசிப்பு என நேரத்தை செலவழித்து வந்த பொதுமக்களுக்கு ஒருகட்டத்தில் அதுவும் வெறுப்பை ஏற்படுத்திவிட்டது. அதனால் மனஉளைச்சலுடன் பெரும்பாலான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் அதிகரித்த தற்கொலைகள் – என்ன தீர்வு மனநல நிபுணர்கள் ஆலோசனை

காவல்துறையினரும் கொரோனா ஊரடங்கு தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்கள் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் கொரோனா ஊரடங்கில் தமிழகத்தில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல்களை மனநல நிபுணர்களும் காவல்துறையினரும் நம்மிடம் பகிர்ந்துகொண்டனர்.

இதுகுறித்து மாநில குற்ற ஆவண காப்பக காவல்துறையினரிடம் கேட்டபோது, முன்பெல்லாம் ஒரு காவல் நிலையத்தில் வாரத்துக்கு ஒன்று அல்லது 3 தற்கொலை வழக்குகள் பதிவு செய்யப்படும். ஆனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை தற்கொலை வழக்குகள் அதிகரித்துள்ளன. அதாவது தினமும் ஒன்று அல்லது 2 தற்கொலை வழக்குகள் பதிவாகிவருகின்றன. தற்கொலை வழக்குகள், கொலை வழக்குகளுக்கு எப்ஐஆரை காவல்துறையினர் பதிவு செய்துவருகின்றனர். அதனால் இந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கும் என்றனர்.

கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் அதிகரித்த தற்கொலைகள் – என்ன தீர்வு மனநல நிபுணர்கள் ஆலோசனை

மனநல நிபுணர் அபியிடம் பேசினோம். ஒவ்வொரு மனிதனுக்கும் உடல்நலத்தைப் போல மனநலமும் முக்கியமானது. காய்ச்சல், தலைவலிகளுக்கு சர்வசாதாரணமாக சிகிச்சை பெற்றுகொள்ளுபவர்கள் மனநல தொடர்பான பிரச்னைகளுக்கு ரகசியமாகவே பெறும் சூழல் நிலவுகிறது. ஊரடங்கில் சாதாரணமாகவே பலர் மனநல பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ஏனெனில் இயல்பு வாழ்க்கையிலிருந்து இன்னொரு புதிய வாழ்க்கை சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஊரடங்கு கால வாழ்க்கை தமிழர்களுக்கு புதியது. அதனால் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுவிட்டனர். வருமானமின்றி தவிக்கும் மக்கள், குடும்பத்தைக் காப்பாற்ற முடியாமல் திணறி வருகின்றனர். வீட்டுக்குள்ளேயே முடங்கியதால் உடல்நல பாதிப்புகளும் அதிகமாகியுள்ளது. எனவே மனநல தொடர்பான கவுன்சலிங்கை ஆரம்பத்திலேயே பெற்றால் பின்னாளில் வரும் பாதிப்புகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். சூழல்நிலைக்கு ஏற்ப வாழ மனிதர்கள் பழகிகொள்ள வேண்டும் என்றார்.

சென்னையில் நடந்த சில முக்கிய சம்பவங்கள்

சென்னை கீழ்கட்டளை பகுதியில் 9-ம் வகுப்பு படிக்கும் மகளும் பிரபாவதியும் குடியிருந்து வந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பிரபாவதியின் கணவர் கோவிந்தசாமி இறந்துவிட்டார். அதனால் பிரபாவதியின் தந்தை செல்வராஜ் (81) என்பவர்தான் மகளையும் பேத்தியையும் கவனித்து வந்தார். முதுமையிலும் மகள், பேத்தி செலவுகளுக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். தினமும் மகளைச் சந்தித்துவிட்டுச் செல்வார். கடந்த 29-ம் தேதி மகளைச் சந்திக்க வந்த செல்வராஜிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் ஒரே சேலையில் பிரபாவதியும் அவரின் மகளும் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தனர். மடிப்பாக்கம் போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் அதிகரித்த தற்கொலைகள் – என்ன தீர்வு மனநல நிபுணர்கள் ஆலோசனை

சென்னை கீழ்கட்டளை, துரைராஜ்நகரில் உள்ள தாய்மாமன் வீட்டில் தங்கியிருந்த சுரேஷ்கிருஷ்ணாவும் அவரின் சகோதரி மதுமிதாவும் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருந்தனர். ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருந்த மதுமிதாவுக்கு செல்போன்தான் உலகமாகி விட்டது. எந்நேரமும் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்த மதுமிதாவை தாய்மாமன் கண்டித்ததோடு செல்போனையும் பறித்து வைத்துக் கொண்டார். விளைவு மதுமிதா குளியலறையில் தற்கொலை செய்துக் கொண்டார். 2 வயதில் அம்மாவை இழந்த சுரேஷ்கிருஷ்ணா, தனக்கு ஆதரவாக இருந்த ஒரே அக்காள் மதுமிதாவை 18-வயதில் இழந்துள்ளார்.

சென்னை கிண்டி காவல் நிலையத்தில் 16.6.2020-ல் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரில் ஈக்காட்டுத்தாங்கல் பகுதியைச் சேர்ந்த சஞ்சிவைய்யாவுக்கு ஊரடங்கு காரணமாக வேலைப்பறிபோனது. அதனால் ஏற்பட்ட தகராறில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

அம்பத்தூர் காவல் நிலையத்தில் 28.6.2020-ல் பதிவான எப்.ஐ.ஆரில் அம்பத்தூர் சூரப்பட்டு மதுரா மேட்டூரைச் சேர்ந்த ராம்தாஸ், ஊடரங்கு காரணமாக வேலையை இழந்தார். அதனால் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்து கொண்டார். 29-ம் தேதியும் அம்பத்தூர் காவல் நிலையத்தில் தற்கொலை வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது.

இவ்வாறு சென்னை மட்டுமல்லாமல் தமிழக முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் தற்கொலை வழக்குகள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன. எனவே தற்கொலை சம்பவங்களைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

– எஸ்.செல்வம்