நியூசிலாந்தில் லாக்டெளன் ரத்து – கட்டுக்குள் வந்த கொரோனா

 

நியூசிலாந்தில் லாக்டெளன் ரத்து – கட்டுக்குள் வந்த கொரோனா

கொரோனா இந்த உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. பல நாடுகளும் கொரோனா பரவலிலிருந்து எப்படித் தற்காத்துக்கொள்வது எனக் குழம்பி உள்ளது. லாக்டெளன், விமானப் போக்குவரத்து நிறுத்தம் எனப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 17 லட்சத்து  88 ஆயிரத்து 085 பேர்.  கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 34 லட்சத்து 3 ஆயிரத்து 840 நபர்கள்.

நியூசிலாந்தில் லாக்டெளன் ரத்து – கட்டுக்குள் வந்த கொரோனா
கொரோனா வைரஸ்

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 75 ஆயிரத்து 551 பேர்.  தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 74,08,694 பேர்.

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது  அமெரிக்காவில் 70,98,291 பேரும், இந்தியாவில் 56,46,010 பேரும், பிரேசில் நாட்டில்  45,95,335 பேரும் கொரோனவால்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

சில நாடுகள் கொரோனா தாக்கத்தின் தொடக்கத்திலேயே விழித்துக்கொண்டன. அதனால், அதிகளவில் பரவாமல் நாட்டு மக்களைக் காத்தன. அந்த நாடுகளில் ஒன்றுதான் நியூசிலாந்து.

நியூசிலாந்தில் லாக்டெளன் ரத்து – கட்டுக்குள் வந்த கொரோனா

இதுவரை நியூசிலாந்தில் கொரோனாவில் மொத்தப் பாதிப்பு 1854 பேர். இவர்களில் சிகிச்சையால் குணமடைந்தவர்கள் 1737. இறந்தவர்கள் 25.

கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி நியூசிலாந்தில் முதல் கொரோனா நோயாளி உறுதி செய்யப்பட்டார். அதிகபட்சமாக மார்ச் 28 ம் தேதி 146 பேர் உறுதி செய்யப்பட்டன. உடனே உதாரித்துக்கொண்ட அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தது. லாக்டெளன் அறிவிக்கப்பட்டது.

நியூசிலாந்தில் லாக்டெளன் ரத்து – கட்டுக்குள் வந்த கொரோனா

100 நாட்கள் புதிய கொரோனா நோயாளி இல்லை என்ற நிலை வந்தது. ஆனால், அடுத்த இரண்டு நாளில் புதிய நோயாளி உறுதி செய்யப்பட்டார். அதனால். ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

லாக்டெளனால் நியூசிலாந்து தேர்தலே ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் நியூசிலாந்து நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் லாக்டெளன் விலக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இருக்கும் ஓரிரு இடங்களில் மட்டும் லாக்டெளன் விதிகள் கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.