இலங்கை கொழும்பு நகரில் மீண்டும் லாக்டெளனா? #கொரோனா

 

இலங்கை கொழும்பு நகரில் மீண்டும் லாக்டெளனா? #கொரோனா

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை, திறமையாக சில நாடுகள் கையாண்டன. அவற்றில் முதன்மையானது இலங்கை. அந்த நாட்டில் தொற்று பரவத் தொடங்கியதுமே, லாக்டெளன் அறிவிக்கப்பட்டு, தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டன.

அதனால், இலங்கையில் நோய்த் தொற்று கைக்குள் இருந்தது. ஆனால், கடந்த ஒரு மாதமாக அங்கே கொரோனா இரண்டாம் அலை வீசி வருகிறது. அதனால், கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நவம்பர் 17-ம் தேதி காலை நேர நிலவரப்படி, இலங்கையில் மொத்த கொரோனா பாதிப்பு 17,674 பேர். அவர்களில் 11,806 பேர் குணமடைந்தனர். 61 பேர் சிகிச்சை பலனில்லாது இறந்துவிட்டனர்.

இலங்கை கொழும்பு நகரில் மீண்டும் லாக்டெளனா? #கொரோனா

அக்டோபர் 23-ம் தேதியன்று ஒரே நாளில் அதிகளவில் 866 பேர் புதிய நோயாளிகளாகக் கண்டறியப்பட்டனர். அதைத் தொடர்ந்து தினமும் 300, 400 எனும் அளவில் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நவம்பர் 15-ம் தேதி 704 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செயய்ப்பட்டது.

இலங்கையின் கொழும்பு நகரில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது பலருக்கும் கவலையை அளிக்கிறது. சில வாரங்களுக்கு முன் அங்குள்ள முக்கிய சந்தையை மூடுமளவுக்கு கொரோனா பரவல் அதிகரித்தது.

இலங்கை கொழும்பு நகரில் மீண்டும் லாக்டெளனா? #கொரோனா

இந்நிலையில் கொழும்பு நகரின் மேயர் ரோஸி சேனநாயக்க, கொழும்பு நகரில் கொரோனா தொற்றைக் குறைக்க வேண்டும் என்றால், நகருக்குள் நுழையும் வழிகளை மூட வேண்டும் என்றும், கொழும்பு நகரில் 14 – 21 நாட்கள் லாக்டெளன் அறிக்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

நகரின் மேயர் எனும் வகையில் அவரின் கருத்து முக்கியமானது. அதனை ஏற்று இலங்கை அரசு கொழும்பு நகரில் மீண்டும் லாக்டெளன் அறிவிக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.