கட்டுக்குள் அடங்காத கொரோனா: இந்த 13 நகரங்களில் 5வது முறையாக ஊரடங்கு என தகவல்!?

கட்டுக்குள் அடங்காத கொரோனா: இந்த 13 நகரங்களில் 5வது முறையாக ஊரடங்கு என தகவல்!?

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கத்தை அமல்படுத்தும்படி தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி, கடந்த மார்ச் 24, ஏப்ரல் 14 மற்றும் மே 1 ஆம் தேதி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு, மூன்று முறை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து நான்காவது ஊரடங்கு மே 31 வரை நீடிக்கப்பட்டது.

கட்டுக்குள் அடங்காத கொரோனா: இந்த 13 நகரங்களில் 5வது முறையாக ஊரடங்கு என தகவல்!?

இந்நிலையில் கொரோனா தாக்கம் இந்தியாவில் குறையாத நிலையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு பொதுமுடக்கம் 5 வது முறையாக நீடிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளன.

இதனிடையே உள்துறை அமைச்சர் அமித்ஷா ஊரடங்கு நீடிப்பது குறித்து கடந்த 28 ஆம் தேதி மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

கட்டுக்குள் அடங்காத கொரோனா: இந்த 13 நகரங்களில் 5வது முறையாக ஊரடங்கு என தகவல்!?

இந்நிலையில் ஊரடங்கு நீடிக்கப்படுமாயின் கொரோனா தொற்று தீவிரமாக உள்ள
மும்பை, டில்லி, அகமதாபாத், தானே, புனே, ஹைதராபாத், கொல்கத்தா -ஹவுரா, இந்தூர்-மத்தியப் பிரதேசம், ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூர் – ராஜஸ்தான், சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் தமிழ்நாடு ஆகிய 13 நகரங்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடு, சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்படும் என கூறப்படுகிறது.