மும்பை, சென்னை உள்ளிட்ட 11 நகரங்களில் மட்டும் லாக்டவுன் 5.0?

 

மும்பை, சென்னை உள்ளிட்ட 11 நகரங்களில் மட்டும் லாக்டவுன் 5.0?

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு தழுவிய லாக்டவுனை 4 கட்டங்களாக நடைமுறைப்படுத்தியுள்ளது. 4ம் கட்ட லாக்டவுன் வரும் 31ம் தேதியோடு நிறைவடைய உள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் மிகவும் தீவிரமாக உள்ளது. நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்தை தாண்டி விட்டது. இதனால் லாக்டவுன் 5.0-வை மத்திய அரசு நடைமுறைப்படுத்தும் என தகவல் வெளியானது.

மும்பை, சென்னை உள்ளிட்ட 11 நகரங்களில் மட்டும் லாக்டவுன் 5.0?

பிரதமர் மோடி தனது மான் கீ பாத் நிகழ்ச்சியில் லாக்டவுன் 5.0 குறித்த அறிவிப்பை வெளியிடுவார். அதேசமயம் லாக்டவுனில் மேலும் தளர்வுகளை அறிவிப்பார் என செய்தி வெளியானது. ஆனால் இதனை மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. மேலும் இது போன்ற செய்திகள் வெறும் ஊகங்கள் என விளக்கம் கொடுத்துள்ளது.

மும்பை, சென்னை உள்ளிட்ட 11 நகரங்களில் மட்டும் லாக்டவுன் 5.0?

அதேசமயம் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாக வெளியான அறிக்கையில், நாட்டின் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பில் 70 சதவீத பங்களிப்பை கொண்டுள்ள டெல்லி, மும்பை, பெங்களூரு, தானே, புனே, இந்தூர், சென்னை, அகமதாபாத், ஜெய்பூர், சூரத் மற்றும் கொல்கத்தா ஆகிய 11 நகரங்களில் ஜூன் 1ம் தேதி முதல் லாக்டவுன் 5.0 அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அம்மாநில மக்களுக்கு உரையாற்றுகையில் மே 31ம் தேதிக்கு பிறகும் லாக்டவுன் நீட்டிக்கப்படலாம் என மறைமுகமாக குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.