புதுச்சேரியில் கொரோனா பொதுமுடக்க கட்டுப்பாட்டு விதிமுறைகள் டிச.31 வரை நீட்டிப்பு

 

புதுச்சேரியில் கொரோனா பொதுமுடக்க கட்டுப்பாட்டு விதிமுறைகள் டிச.31 வரை நீட்டிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் அதே வேளையில் புதுச்சேரியிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் அரசு, செவ்வாய் கிழமை தோறும் முழுபொதுமுடக்கத்தை அமல்படுத்தி வருகிறது. இதனிடையே மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி, புதுச்சேரிக்கு செல்ல இபாஸ் தேவையில்லை என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு நாளொன்றுக்கு 500க்கும் மேற்பட்டோருக்கு பரவி வருகிறது.

புதுச்சேரியில் கொரோனா பொதுமுடக்க கட்டுப்பாட்டு விதிமுறைகள் டிச.31 வரை நீட்டிப்பு

இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகமிருப்பதாக கண்டறியப்பட்டுள்ள 32 பகுதிகளில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் கொரோனா பொதுமுடக்க விதிமுறைகள் தற்போதுள்ள தளர்வுகளில் படி மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி டிச.31 வரை நீட்டித்து புதுச்சேரி பேரிடர் மேலாண்மை துறை செயலரும் ஆட்சியருமான அருண் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 902 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் 194 பேர் சிகிச்சை பெறும் நிலையில், வீடுகளில் 325 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 609 ஆக உள்ளது.