லாக்-அப் மரணங்கள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும் : தென்மண்டல ஐ.ஜி.முருகன்

 

லாக்-அப் மரணங்கள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும் : தென்மண்டல ஐ.ஜி.முருகன்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி, விசாரணையைக் கையிலெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், முத்து ராஜ், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோரும் கைது செய்யப்பட்டு கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த இரட்டை கொலை வழக்கு வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்களைத் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விரிவான தீர்ப்பு பின்னர் வழங்கப்படும் என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

லாக்-அப் மரணங்கள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும் : தென்மண்டல ஐ.ஜி.முருகன்

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தென்மண்டல ஐ.ஜி.முருகன் , “சாத்தான்குளம் வழக்கில் சிபிசிஐடிக்கு தேவையான ஒத்துழைப்பை உள்ளூர் காவல் துறையினர் வழங்குவர். லாக்கப் மரணங்கள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். தென் மண்டல காவல்துறையில் ஆங்காங்கே குறைகள் இருக்கலாம். மறுக்க வில்லை என்று கூறிய அவர் பிரண்ட்ஸ்ஆப் போலீசுக்கு எந்த அதிகாரமும்இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சாத்தான்குளம் கொலை வழக்கில் சாட்சி அளித்த பெண் காவலருக்கு ஊதியத்துடன், ஒரு மாதம் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.