பொதுமுடக்க விதிமீறல்.. 17 கோடி ரூபாயை நெருங்கும் அபராதம் வசூலிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக விலகல் மற்றும் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கை மூலமாக தான் நம்மை காத்துக் கொள்ள முடியும் என்பதால், இந்த கொடிய வகை நோய்த்தொற்றில் இருந்து மக்களைக் காக்க ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இருப்பினும், அரசு விதிகளை மீறி வெளியே செல்பவர்கள் மீது காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், கட்டுப்பாடுகளைப் பின்பற்றாத வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்தும் அபராதம் விதித்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதம் ரூ.16.96 கோடியாக உயர்ந்துள்ளதாக என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது முடக்க விதிகளை மீறிய 6,09,816 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் 7,98,570 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் இதுவரை 7,28,693 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Most Popular

பக்ரித் பண்டிகை கொண்டாட ஊருக்கு சென்ற ராணுவ வீரர் மாயம்… தேடுதல் பணி தீவிரம்!

பக்ரீத் பண்டிகை தினத்தை கொண்டாடுவதற்காக ஜம்மு காஷ்மீர் சோபியான் மாவட்டத்திற்கு சென்ற 162-வது பட்டாலியன் படை பிரிவை சேர்ந்த ரைபிள்மென் ஒருவர் மாலை 5 மணி முதல் காணாமல் போயுள்ளார். காணாமல் போன...

நாய்க்குட்டிக்கும் மாஸ்க் அணிவித்த சிறுவன்… இதயங்களை வென்ற செயல்!

அரசாங்கம் மக்கள் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லுமாறு தொடர்ந்து வலுயுறுத்தி வருகிறது. பெரும்பாலான மக்கள் அதை கடைபிடிப்பதில்லை. ஆனால் சிறுவன் ஒருவன் தான் மாஸ்க் அணிந்துள்ளது மட்டுமில்லாமல் தனது மாஸ்க் அணிவித்து...

ஆளுநர் மாளிகையில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து

ஆளுநருக்கும், ஆளுநர் மாளிகையில் உள்ளவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து ராஜ்பவனில் நடைபெற இருந்த சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழக ஆளுநர் மாளிகையில் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான...

இன்று 5,609 பேருக்கு கொரோனா… இதுவரை இல்லாத அளவிற்கு அதிக பட்சமாக 109 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று 58,211 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5,609 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.63 லட்சத்தைக் கடந்துள்ளது. பரிசோதனை செய்யப்படுவோர்கள் மற்றும்...