பொதுமுடக்க விதிமீறல் : ரூ.19 கோடியை நெருங்கும் அபராதம் வசூல்!

 

பொதுமுடக்க விதிமீறல் : ரூ.19 கோடியை நெருங்கும் அபராதம் வசூல்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக விலகல் மற்றும் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கை மூலமாக தான் நம்மை காத்துக் கொள்ள முடியும் என்பதால், இந்த கொடிய வகை நோய்த்தொற்றில் இருந்து மக்களைக் காக்க ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இருப்பினும், அரசு விதிகளை மீறி வெளியே செல்பவர்கள் மீது காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், கட்டுப்பாடுகளைப் பின்பற்றாத வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தும் வந்தனர். இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட வாகங்கள் திருப்பிக் கொடுக்கப்பட்ட நிலையிலும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

பொதுமுடக்க விதிமீறல் : ரூ.19 கோடியை நெருங்கும் அபராதம் வசூல்!

இந்நிலையில், இந்த நிலையில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதம் ரூ.18.94 கோடியாக உயர்ந்துள்ளதாக என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 6,54,177 பொது முடக்க விதிகளை மீறிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் 9,08,446 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் இதுவரை 8,26,301 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.