மீண்டும் முழு ஊரடங்கா?… தமிழக சுகாதாரத்துறை விளக்கம்!

 

மீண்டும் முழு ஊரடங்கா?… தமிழக சுகாதாரத்துறை விளக்கம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நாளொன்றுக்கு ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்து வந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது 3 ஆயிரத்தை எட்டியுள்ளது. உயிரிழப்புகளும் கணிசமாக அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.

மீண்டும் முழு ஊரடங்கா?… தமிழக சுகாதாரத்துறை விளக்கம்!

இதற்கு மறுப்பு தெரிவித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முழு ஊரடங்கு அமல் படுத்துவது பற்றி இதுவரை எந்த திட்டமும் இல்லை என்றும் 7ம் தேதிக்கு பிறகு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தேர்தல் முடிந்தவுடன் முழு ஊரடங்கு என சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் பொய்யானது என்றும் அவை வதந்தி தான் என்றும் தமிழக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. அத்தியாவசிய மற்ற பணிகளுக்கு மட்டும் சில கட்டுப்பாடு விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மீண்டும் முழு ஊரடங்கா?… தமிழக சுகாதாரத்துறை விளக்கம்!

கொரோனா பாதிப்பு அதிகரிப்பது மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தற்போது சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு முக்கிய அறிவிப்புகள் பல வெளியாக வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.