‘இரண்டாம் அலையில் கொரோனா பாதிப்பு’ வடமாநிலங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்!

‘இரண்டாம் அலையில் கொரோனா பாதிப்பு’ வடமாநிலங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்!

கொரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்குவதால் குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் மீண்டும் முழு ஊரடங்கு அமலாகியுள்ளது.

‘இரண்டாம் அலையில் கொரோனா பாதிப்பு’ வடமாநிலங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்!

வட மாநிலங்களில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளன. அதாவது, குஜராத்தின் அகமதாபாத், சூரத், வதோதரா மற்றும் ராஜ்கோட் நகரங்களில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது.

‘இரண்டாம் அலையில் கொரோனா பாதிப்பு’ வடமாநிலங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்!

மறு அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு தொடரும் என்றும் அகமதாபாத்தில் மட்டும் வெள்ளிக்கிழமை இரவில் இருந்து திங்கள் கிழமை காலை வரை தொடர்ந்து 57 மணி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. குஜராத்தில் பள்ளிகள் 23ம் தேதி வரை திறக்கப்படாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதே போல, ஹரியானா மாநிலத்திலும் நவ.30 வரை பள்ளிகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய பிரதேசத்தின் 5 மாவட்டங்களில் இரவு 10 – காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.