#BREAKING: குடியாத்தம் நகராட்சியில் 8 நாட்களுக்கு முழு பொது முடக்கம் அறிவிப்பு!

 

#BREAKING: குடியாத்தம் நகராட்சியில் 8 நாட்களுக்கு முழு பொது முடக்கம் அறிவிப்பு!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 4,985 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 87,235 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகமாக இருந்த சென்னையில் தற்போது பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது.

#BREAKING: குடியாத்தம் நகராட்சியில் 8 நாட்களுக்கு முழு பொது முடக்கம் அறிவிப்பு!

தமிழகத்தில் விழுப்புரம், திருவாரூர், மதுரை, தேனி, திருச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி நடவடிக்கையை கையாண்டு வருகின்றனர். இதன் காரணமாக சில மாவட்டங்களில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் 8 நாட்களுக்கு முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 24 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை குடியாத்தம் நகராட்சியில் 8 நாட்கள் முழு முடக்கம் அமலில் இருக்கும் என்றும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பால், மருந்தகங்கள், பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.