Home தமிழகம் பொதுமுடக்க விதிமீறல்: இதுவரை ரூ.19.35 கோடி அபராதம் வசூலிப்பு!

பொதுமுடக்க விதிமீறல்: இதுவரை ரூ.19.35 கோடி அபராதம் வசூலிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக விலகல் மற்றும் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கை மூலமாக தான் நம்மை காத்துக் கொள்ள முடியும் என்பதால், இந்த கொடிய வகை நோய்த்தொற்றில் இருந்து மக்களைக் காக்க ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இருப்பினும், அரசு விதிகளை மீறி வெளியே செல்பவர்கள் மீது காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், கட்டுப்பாடுகளைப் பின்பற்றாத வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தும் வந்தனர். இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட வாகங்கள் திருப்பிக் கொடுக்கப்பட்ட நிலையிலும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த நிலையில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதம் ரூ.19.35 கோடியாக உயர்ந்துள்ளதாக என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பொது முடக்க விதிகளை மீறிய 6,60,011 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் 9,24,933 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் இதுவரை 8,40,744 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Most Popular

இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா; ஒரே நாளில் 1,179 பேர் மரணம்!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் அதே சூழலில், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்...

முக்திக்கு வழி கொடுக்கும் விஷ்ணு சகஸ்ரநாமம்!

புதன் பகவானுக்குரிய தெய்வமான மகாவிஷ்ணுவை வணங்குவதற்கு உரிய நாளாக புதன்கிழமை சொல்லப்படுகிறது.பல தெய்வங்களுக்கும் சகஸ்ரநாமங்கள் இருந்தபோதும் சகஸ்ரநாமம் என்றதும் நம் நினைவுக்கு வருவது விஷ்ணு சகஸ்ரநாமமே. இந்நாளில் விஷ்ணு சகஸ்ரநாமத்தை...

மு.க.ஸ்டாலினின் கொரோனா பரிசோதனை முடிவு வெளியானது!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா பரிசோதனைக்கான முடிவு வெளிவந்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது....

வெங்கய்யா நாயுடு குணமடைய முதல்வர் பழனிசாமி பிரார்த்தனை!

துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு குணமடைய தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா...
Do NOT follow this link or you will be banned from the site!