‘ஊரடங்கு உத்தரவு ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு’ – மகாராஷ்டிர மாநில அரசு அறிவிப்பு!

 

‘ஊரடங்கு உத்தரவு ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு’ – மகாராஷ்டிர மாநில அரசு அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இருப்பினும் இங்கு கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்கிறது.

‘ஊரடங்கு உத்தரவு ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு’ – மகாராஷ்டிர மாநில அரசு அறிவிப்பு!

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கும் நிலையில், மகாராஷ்டிர மாநிலம் தான் அதிக அளவு பாதிப்பை சந்தித்துள்ளது. அம்மாநிலத்தில் 1,64,626 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த கொடிய நோய் தாக்குதலால் கிட்டத்தட்ட 7,500 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கை நீடித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அங்கு கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.