#BREAKING: தமிழகத்தில் மறு அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு நீட்டிப்பு!

 

#BREAKING: தமிழகத்தில் மறு அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு நீட்டிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்பட்டது. ஞாயிற்றுக் கிழமைகளில் ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இம்மாதத்திற்கான கட்டுபாடுகள் நாளை இரவு 12மணியோடு முடிவடைகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் மறு உத்தரவு வரும் வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

#BREAKING: தமிழகத்தில் மறு அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு நீட்டிப்பு!

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தற்போது இருக்கும் கட்டுப்பாடுகள் தொடரும். ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அன்று சென்னையில் மெட்ரோ ரயில்களை குறைந்த அளவில் இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அனைத்து வழிபாட்டு தளங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்ய அனுமதி இல்லை. தினமும் நடைபெறும் பூஜைகள், பிரார்த்தனைகள், சடங்குகளை ஊழியர்கள் மூலம் நடத்த தடையில்லை. பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல் கோயில் பணியாளர் மட்டும் கலந்து கொண்டு குடமுழுக்கு விழா நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

#BREAKING: தமிழகத்தில் மறு அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு நீட்டிப்பு!

மேலும், தமிழகத்தில் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நாளன்று முகவர்கள், வேட்பாளர்களுக்கு கட்டுப்பாடு இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.