ஜூன் 8ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு!

 

ஜூன் 8ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அந்தந்த மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன. அதன் ஒரு பகுதியாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தேவைக்கேற்ப ஊரடங்கை நீட்டித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியதன் பேரில் டெல்லி, பீகார், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்திலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 8ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு!

இந்நிலையில், முழு பொதுமுடக்கம் ஜூன் 8ம் தேதி வரை நீடிக்கப்படுவதாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். அம்மாநிலத்தில் நாளொன்றுக்கு 6 ஆயிரம் பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். இதுவரை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கை நீடித்து உத்தரவிட்டுள்ள முதல்வர், மாஸ்க் அணியாத நபர்களுக்கு ரூபாய் 500 முதல் 1000 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

ஜூன் 8ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு!

மேலும், வெளிமாநிலங்களில் இருந்து ராஜஸ்தான் வருபவர்களுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமென்றும் பரிசோதனை செய்யாதவர்கள் 15 நாட்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.