மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு- முதல்வர் அறிவிப்பு

 

மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு- முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருவதால் ஜூலை 31 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டது. பொது முடக்கம் அமலில் இருப்பினும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு பாஸ் தேவையில்லை என்றும் பிற மாவட்டங்களுக்குச் செல்ல பாஸ் பெற வேண்டும் என்ற தளர்வுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் மதுரை,தேனி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஜூலை 5 வரை முழு பொதுமுடக்கம் பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி, அமல்படுத்தப்பட்ட முழுப் பொதுமுடக்கம் நாளையுடன் நிறைவடைகிறது.

மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு- முதல்வர் அறிவிப்பு

இந்த நிலையில் மதுரையில் ஜூலை 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். மதுரை மாநகராட்சி எல்லை, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மேற்கு பகுதிகளிலும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளிலும் முழு முடக்கம் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து, முழு பொது முடக்கக் காலத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி என்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தீவிரமாகக் கண்காணிக்கப்படும், எந்த விதமான நடவடிக்கைகளுக்கும் அனுமதி கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கட்டுப்பாட்டுப் பகுதி, தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.