தமிழகத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு : அரசாணை வெளியீடு

 

தமிழகத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு : அரசாணை வெளியீடு

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. சென்னையில் மட்டுமே பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கை நீட்டிப்பதா இல்லையா என்பது குறித்து நேற்று மருத்துவக் நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். அதனையடுத்து தமிழகத்தில் ஊரடங்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதே போல தற்போது இருக்கும் ஞாயிற்று கிழமைகளில் ஊரடங்கு முறை தொடரும் என்றும் தற்போது இருக்கும் ஊரடங்கு விதிமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படும் என்றும் அறிவித்தார்.

தமிழகத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு : அரசாணை வெளியீடு

இந்த நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி இரவு 12 மணி வரை பொது முடக்கம் அமலில் இருக்கும் என்றும் திருமண நிகழ்வுகளில் 50 பேர் கலந்து கொள்ளலாம், இறப்பு இறுதி சடங்கு உள்ளிட்ட துக்க நிகழ்ச்சிகளில் 20 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ளலாம் என்றும் பொது இடங்களிலும் பணியிடங்களிலும் பயணம் செய்யும் போதும் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் பொது இடங்களில் மது அருந்த, குட்கா பயன்படுத்த தடை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.