#BREAKING: கர்நாடகாவில் பொதுமுடக்கம் நீக்கம்: முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு!

 

#BREAKING: கர்நாடகாவில் பொதுமுடக்கம் நீக்கம்: முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் லாக் டவுனை நீடித்த பிரதமர் மோடி பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அன்லாக்கை அறிவித்தார். அதே போல கொரோனா பாதிப்பை பொறுத்து அந்தந்த மாநில அரசு ஊரடங்கை அமல்படுத்துவதையும் தளர்ப்பதையும் முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்தார். அதன் படி அந்தந்த மாநில அரசுகள் ஊரடங்கு முடிவுகளை எடுத்து வருகிறது.

#BREAKING: கர்நாடகாவில் பொதுமுடக்கம் நீக்கம்: முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு!

கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 1,408 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கர்நாடகாவில் நாளை முதல் பொதுமுடக்கம் நீக்கப்படுவதாக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், பெங்களூரில் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இருப்பினும் பொருளாதாரம் முக்கியம் என்பதால் மக்கள் பணிக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதனால் நாளை முதல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் தளர்வு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா பரவலை தடுக்க மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் சீரான பொருளாதாரத்தை நிலைநாட்டிக் கொண்டே கொரோனாவுக்கு எதிராக நாம் போராட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.