படிப்பறிவும் இல்லை.. மொபைல் போனும் இல்லை.. தடுப்பூசிக்கு பதிவு செய்ய முடியாமல் திணறும் உ.பி. கிராமம்

படிப்பறிவும் இல்லை.. மொபைல் போனும் இல்லை.. தடுப்பூசிக்கு பதிவு செய்ய முடியாமல் திணறும் உ.பி. கிராமம்

உத்தர பிரதேசத்தில் அம்தோரா கிராமத்தினர் படிப்பறிவு மற்றும் மொபைல்போனும் இல்லாததால் தடுப்பூசிக்கு பதிவு செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.

உத்தர பிரதேசதம் மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் அம்தோரா. இந்த கிராமத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த கிராமத்தை சேர்ந்த ஆதித்யா சிங் என்பவர் கூறுகையில், இந்த கிராமத்தில் குறைந்தபட்சம் 40 கொரோனா நோயாளிகள் உள்ளனர். கொரோனாவால் ஏற்கனவே 25 முதல் 28 பேர் வரை உயிர் இழந்து விட்டனர். எங்களுக்கு அரசாங்கத்திடமிருந்தோ அல்லது எந்தவொரு அதிகாரத்திடமிருந்தோ எந்த ஆதரவும் கிடைக்கவில்லை.

படிப்பறிவும் இல்லை.. மொபைல் போனும் இல்லை.. தடுப்பூசிக்கு பதிவு செய்ய முடியாமல் திணறும் உ.பி. கிராமம்
கிராமவாசி

தடுப்பூசி செலுத்த வேண்டுமானால் நாங்கள் முதலில் கோவின் வலைத்தளம் அல்லது ஆரோக்யா சேது செயலியில் பதிவு செய்ய வேண்டும் என நிர்வாகம் விரும்புகிறது. கிராமத்தில் பெரும்பாலான மக்கள் கல்வியறிவற்றவர்கள் மற்றும் மொபைல் போன்கள் கிடையாது. தடுப்பூசிக்கு அவர்கள் எவ்வாறு பதிவு செய்வார்கள் என தெரிவித்தார்.

படிப்பறிவும் இல்லை.. மொபைல் போனும் இல்லை.. தடுப்பூசிக்கு பதிவு செய்ய முடியாமல் திணறும் உ.பி. கிராமம்
டாக்டர் என்.ராய்

பிப்ராலி சமூக சுகாதார மைய கண்காணிப்பாளர் டாக்டர் என்.ராய் கூறுகையில், வழிகாட்டுதல்களின்படி, உள்ளூர்வாசிகள் தடுப்பூசி போட வேண்டும் என்றால் அவசியம் கோவின் வலைத்தளம் அல்லது ஆரோக்கிய சேது செயலியில் பதிவு செய்வது பாதுகாப்பு குறியீடு பெற வேண்டும். பின் அவர்கள் சமூக சுகாதார மையத்துக்கு வர வேண்டும். எங்களது சரிபார்ப்பாளர் அவர்களிடம் பாதுகாப்பு குறியீட்டை பெற்று பதிவு செய்வார். அதன் நாங்கள் அவர்களுக்கு தடுப்பூசி போடுவோம் என தெரிவித்தார்.