ஓணம் பண்டிகையையொட்டி கோவையில் உள்ளூர் விடுமுறை!

 

ஓணம் பண்டிகையையொட்டி கோவையில் உள்ளூர் விடுமுறை!

கேரளாவின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கியது. ஓணம் பண்டிகையின் போது கேரள மக்கள் பூக்களால் கோலமிட்டு தங்களின் பாரம்பரிய உடை அணிந்து இறைவனை வழிபடுவர். ஆனால் இம்முறை கொரோனா காரணமாக ஓணம் பண்டிகை களையிழந்துள்ளது. ஓணம் பண்டிகையை பொது இடங்களில் கொண்டாட கூடாது என கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திலும் ஓணம் பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும்.

ஓணம் பண்டிகையையொட்டி கோவையில் உள்ளூர் விடுமுறை!

இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 31-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார். உள்ளூர் விடுமுறையாக கருவூலம் உள்ளிட்ட பாதுகாப்பு அலுவலர்கள் குறைந்த பணியாளர்களை கொண்டு இயங்கும். விடுமுறை அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்கு பதில் செப்டம்பர் 12ஆம் தேதி பணி நாளாக கருதப்படும் என்றும் ஓணம் பண்டிகையை கோவை மாவட்ட மக்கள் தனிநபர் இடைவெளியுடன் பாதுகாப்போடு கொண்டாடுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேபோல சென்னை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களிலும் ஓணம் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.