உள்ளாட்சி தேர்தல் – திமுக இன்று ஆலோசனை!

 

உள்ளாட்சி தேர்தல் – திமுக இன்று ஆலோசனை!

உள்ளாட்சி தேர்தல் குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இன்று ஆலோசனை நடத்துகிறது.

உள்ளாட்சி தேர்தல் – திமுக இன்று ஆலோசனை!

புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு விழுப்புரம், நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்த சூழலில் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் விடுபட்ட மாவட்டங்களில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதன் காரணமாக உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் நடத்தி முடிப்பதற்கான சாத்தியகூறுகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.

உள்ளாட்சி தேர்தல் – திமுக இன்று ஆலோசனை!

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள திமுக மாவட்ட செயலாளர்களுடன் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாலை 5 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது. செப்டம்பர் 15ல் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் திமுக ஆலோசனை மேற்கொள்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.