#BREAKING: அக்டோபர் 6,9 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்; நாளை மறுநாள் வேட்பு மனுதாக்கல் ஆரம்பம்!

 

#BREAKING: அக்டோபர் 6,9 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்; நாளை மறுநாள் வேட்பு மனுதாக்கல் ஆரம்பம்!

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக அக். 6,9ம் தேதிகளில் நடைபெற உள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் பழனி குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, வேலூர், திருப்பத்தூர் ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. அந்த மாவட்டங்களில் தேர்தல் நடத்துவது குறித்து கடந்த 6ம் தேதி தமிழக தேர்தல் ஆணையர் பழனிகுமார் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அக்கூட்டத்தின் போது, உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை ஆலோசித்து வருவதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்திருந்தார்.

#BREAKING: அக்டோபர் 6,9 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்; நாளை மறுநாள் வேட்பு மனுதாக்கல் ஆரம்பம்!

அதன் படி, 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6, 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் என்று அவர் அறிவித்திருக்கிறார். சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக தேர்தல் ஆணையர் பழனிகுமார், முதல்கட்ட வாக்குப்பதிவு 6ம் தேதி நடைபெறும் என்றும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 9ம்தேதி நடைபெறும்.

செப்டம்பர் 15-ஆம் தேதி மனுத்தாக்கல் ஆரம்பமாகிறது. செப்டம்பர் 22 ஆம் தேதி முடிவடைகிறது. அதற்கு மறுநாள், செப்டம்பர் 23ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டு 25ம் தேதி வரை வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் வழங்கப்படும். 6 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெறும் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 12-ஆம் தேதி நடைபெறும் என்று கூறினார். மேலும், காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 5 மாலை 5 முதல் 6 மணிக்குள் வாக்களிக்கலாம் என்றும் தெரிவித்தார்.