darbar
  • January
    26
    Sunday

Main Area

Main



உள்ளாட்சித் தேர்தல் விவகாரம் : திமுக கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

supreme court
supreme court

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆம் தேதி இரண்டு கட்டமாக நடத்தப்படும் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்தார். இது குறித்து திமுக சார்பில், தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து சட்ட விதிகளையும் தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் நிறைவேற்ற உத்தரவிடக் கோரி  உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 9 புதியதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில்  2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் என்று உத்தரவிட்டது. 

ttn

இந்த தீர்ப்பில் சந்தேகம் இருப்பதாகக் கோரிக்கை வைத்து திமுக சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதனை இன்று விசாரித்த நீதிபதிகள், உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் மீண்டும் தலையிட முடியாது என்று கூறி திமுகவின் கோரிக்கையை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

2018 TopTamilNews. All rights reserved.