அமேசான் போஸ்டரை கிழித்த நவ்நிர்மான் சேனா கட்சி.. சம்மன் அனுப்பிய நீதிமன்றம்… சிக்கலில் ராஜ் தாக்கரே…

 

அமேசான் போஸ்டரை கிழித்த நவ்நிர்மான் சேனா கட்சி.. சம்மன் அனுப்பிய நீதிமன்றம்… சிக்கலில் ராஜ் தாக்கரே…

மகாராஷ்டிராவில் அமேசான் போஸ்டரை நவ்நிர்மான் சேனா கட்சியினர் கிழித்ததால், நேரில் ஆஜராகும்படி அந்த கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு மும்பை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா (எம்.என்.எஸ்.) கட்சி அண்மையில் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பிசோஸூக்கு ஒரு கடிதம் எழுதியது. அந்த கடிதத்தில், அமேசான் செயலியில் தகவல்தொடர்பு மொழிகளில் மராத்தி மொழியை சேர்க்க வேண்டும். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மண்டல் மொழிகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் நாட்டில் அதிகம் பயன்பாட்டில் உள்ள 3வது பெரிய மொழியான மராத்தி இடம் பெறவில்லை என்பதை நவ்நிர்மான் சேனா கட்சி சுட்டிக்காட்டி இருந்தது.

அமேசான் போஸ்டரை கிழித்த நவ்நிர்மான் சேனா கட்சி.. சம்மன் அனுப்பிய நீதிமன்றம்… சிக்கலில் ராஜ் தாக்கரே…
அமேசான்

இந்த சூழ்நிலையில், அமேசான் செயலியில் மராத்தி மொழி இடம்பெறாததால் மும்பையில் அமேசான் போஸ்டர்களை நவ்நிர்மான் சேனா கட்சியினர் கிழித்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து அமேசான் நிறுவனம் மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து. இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக ஜனவரி 5ம் தேதியன்று நேரில் ஆஜராகும்படி மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

அமேசான் போஸ்டரை கிழித்த நவ்நிர்மான் சேனா கட்சி.. சம்மன் அனுப்பிய நீதிமன்றம்… சிக்கலில் ராஜ் தாக்கரே…
ஜெப் பிசோஸ்

இது தொடர்பாக மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சியின் இளைஞர் பிரிவு துணை தலைவரும், அந்த வழக்கின் எதிர்மனுதாரர்களில் ஒருவருமான அகில் சித்ரே கூறுகையில், நாங்கள் எழுதிய கடிதத்துக்கு ஜெப் பிசோஸ் எழுதிய கடிதத்தில் மன்னிப்பு கேட்டு இருந்தார். மேலும் பி.கே.சி.யில் உள்ள அமேசான் அலுவலகத்தில் சந்திப்பும் நடந்தது. அப்போது மராத்தி மொழி சேர்ப்பது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண 20 நாட்கள் அவகாசம் கோரினர். இதற்கிடையில், அவர்கள் எங்கள் மீது வழக்கு தொடர்ந்து உள்ளார்கள். டிண்டோஷியில் மட்டுமல்ல, நவி மும்பையிலும், அவர்கள் அலுவலகங்கள் அல்லது வேர்ஹவுஸ் வைத்திருக்கும் மற்ற எல்லா இடங்களிலும் தொடரப்பட்டுள்ளது. எங்கள் சட்டக்குழு இதனை கையாளும் என்று தெரிவித்தார்.