ஊரக உள்ளாட்சி தேர்தல்; திமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

 

ஊரக உள்ளாட்சி தேர்தல்; திமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

ஊரக உள்ளாட்சி தேர்தலில்  திமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல்; திமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் வருகிற 6 மற்றும் 9 ஆம் தேததிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதேபோல் தேமுதிகவும் தனித்து போட்டியிடுகிறது.

ஊரக உள்ளாட்சி தேர்தல்; திமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான திமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், கரூர் மற்றும் பழனியில் காலியாக உள்ள இடங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை மாவட்ட செயலாளரும் அமைச்சருமான தாமோ அன்பரசன்
அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.