உள்ளாட்சி தேர்தல் : இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம்!

 

உள்ளாட்சி தேர்தல் : இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம்!

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ,கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கான பணியில் தமிழக தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வரும் நிலையில் அதன்படி கடந்த 31ஆம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 

உள்ளாட்சி தேர்தல் : இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம்!

இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம் போன்றவற்றை வாக்காளர்கள் சரிபார்த்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் கொரோனா நோயாளிகள் இரவு 6 மணிமுதல் 7 மணிவரை வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் : இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம்!

.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னையில் இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் பகல் 12 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கூட்டத்தில் கலந்து கொள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் பதவிக்கான தேர்தலை நடத்துவது எப்போது? என விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது. கொரோனா பரவல் காரணமாக அரசியல் கட்சியினர் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.