உள்ளாட்சி தேர்தல்- ஒரே நாளில் 378 பேர் மனுதாக்கல்

 

உள்ளாட்சி தேர்தல்- ஒரே நாளில் 378 பேர் மனுதாக்கல்

உள்ளாட்சி தேர்தலுக்கான மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு ஒருவர் கூட இன்று மனுத்தாக்கல் செய்யவில்லை.

உள்ளாட்சி தேர்தல்- ஒரே நாளில் 378 பேர் மனுதாக்கல்

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி, செப் 22 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. செப்-23 ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் மற்றும் செப்-25 ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப்பெற இறுதி நாள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய முதல் நாளான இன்று 378 மனுக்கள் பெறப்பட்டுள்ளன . 351 மனுக்கள் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 25 மனுக்கள் கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 2 மனுக்கள் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு ஒருவர் கூட இன்று மனுத்தாக்கல் செய்யவில்லை.